தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக தொடர்ந்து நீடிக்கிறது: டிடிவி தினகரன் பேட்டி

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக தொடர்ந்து நீடிக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நேற்று (ஏப்ரல் 11) உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அதிமுக இணைந்தது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக தொடர்ந்து நீடிக்கிறது என்று தெரிவித்தார்.மேலும்,

என்.டி.ஏ. கூட்டணியில் அமமுக தொடர்கிறது

அதிமுக தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று நான் வலியுறுத்தி வந்தது தற்போது நடக்கிறது. எடப்பாடியை கூட்டணி தலைவராக ஏற்கிறீர்களா என்ற கேள்விக்கு மோடி தலைமையிலான அணியில் இருக்கிறோம்.

ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட மாட்டார்

ஓ.பன்னீர்செல்வத்தை எப்போதும் தனிமைப்படுத்தப்பட மாட்டார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

என்.டி.ஏ. கூட்டணியில் ஓபிஎஸ் தொடர்கிறார்

பிரதமர் மோடி தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்கிறார்.

டிடிவி அறிவிப்பால் எடப்பாடிக்கு புதிய நெருக்கடி

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ் நீடிப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளதால் அதிமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ் தொடர்வதாக டிடிவி தினகரன் கூறியிருப்பதால் எடப்பாடிக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எடப்பாடிக்கு பரந்த மனமில்லை

ஒரு சிலருக்கு பரந்த மனது இல்லாததால் ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு வாய்ப்பு இல்லை.

ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு வாய்ப்பு இல்லை

சுயநலத்தை விட்டுவிட்டு இணைந்து பணியாற்ற வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தினார்.

 

The post தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக தொடர்ந்து நீடிக்கிறது: டிடிவி தினகரன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: