நடிகர் விஜய் படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரைக்கு நேற்று புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நண்பர்கள் நண்பிகள், தோழர்கள் தோழிகள் எல்லாருமே வந்திருக்கிறார்கள். அவர்கள் உட்பட மதுரை மக்கள் எல்லாருக்கும் எனது வணக்கம். உங்களுடைய அன்புக்கு கோடான கோடி நன்றிகள். நான் மதுரைக்கு ஜனநாயகன் படம் வேலைக்காக செல்கிறேன். கொடைக்கானலில் ஒரு சூட் பார்க்கப் போகிறேன். கூடிய சீக்கிரம் மதுரை மண்ணுக்கு, வேறு ஒரு சந்தர்ப்பத்தில் வந்து உங்கள் அனைவரையும் மீட் பண்ணி பேசுகிறேன். மதுரை மக்கள் சேப்பா, அவரவர் வீட்டிற்கு சென்று விட வேண்டும். என்னுடைய வேனுக்குப் பின்போ, காருக்குப் பின்போ யாருமே பாலோ பண்ணுவது, பைக்கில் பாஸ்ட்டாக வருவது, பைக் மேல் நின்று கொண்டு ஓட்டுவது, ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டுவது, போன்றவைகளை செய்யாதீர்கள்.
அந்தக் காட்சிகளை எல்லாம் பார்ப்பதற்கு, மனசுக்கு ரொம்ப பதற்றமாக இருக்கிறது. கூடிய சீக்கிரம் வேறு ஒரு சந்தர்ப்பத்தில், உங்கள் அனைவரையும் மீட் பண்ணி பேசுகிறேன். அனைவருக்கும் எனது மே தின வாழ்த்துகள். இந்த மெசேஜை மதுரை விமான நிலையத்தில் என்னால் கூற முடியுமா என்பது தெரியவில்லை. அங்கு சூழ்நிலை எப்படி இருக்கும் என்பதும் தெரியவில்லை. எனவேதான் நான் இங்கு, சென்னை விமான நிலையத்திலேயே, இந்த மெசேஜை பேசுகிறேன். இவ்வாறு கூறினார். தொடர்ந்து, செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். ஆனால் நடிகர் விஜய் பதிலளிக்காமல் புறப்பட்டு சென்றார். நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பின் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
The post முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்தார்; என்னை பின் தொடரக் கூடாது: ரசிகர்களுக்கு விஜய் மீண்டும் எச்சரிக்கை appeared first on Dinakaran.