ஐபிஎல் 15வது லீக் போட்டியில் எழுச்சி பெறுமா சன்ரைசர்ஸ்?: கொல்கத்தாவுடன் இன்று மோதல்

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று நடைபெற உள்ள நடப்பு ஐபிஎல் போட்டியின் 15வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.
* இரு அணிகளுக்கும் இது 4வது லீக் ஆட்டம். இந்த அணிகள் தாங்கள் விளையாடிய தலா 3 ஆட்டங்களில் தலா ஒரு ஆட்டத்தில் மட்டுமே வென்றுள்ளன.
* இவ்விரு அணிகளும் இதுவரை 28 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் கொல்கத்தா 19, ஐதராபாத் 9 ஆட்டங்களில் வெற்றிப் பெற்றுள்ளன.
* இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக ஐதராபாத் 228, கொல்கத்தா 208 ரன் விளாசியுள்ளன.
* குறைந்தபட்சமாக ஐதராபாத் 113, கொல்கத்தா 101 ரன் சேர்த்துள்ளன.
* இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் கொல்கத்தா 4-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
* இரண்டு அணிகளும் கடந்த ஆண்டு பைனல் உட்பட 3 ஆட்டங்களில் மோதின. அந்த 3லும் கொல்கத்தாவே வென்றுள்ளது.
* இவ்விரண்டு அணிகளும் மற்ற அணிகளுடன் கடைசியாக விளையாடிய தலா 5 ஆட்டங்களில் கொல்கத்தா 3-2, ஐதராபாத் 2-3 என்ற கணக்கில் வெற்றி, தோல்விகளை பெற்றுள்ளன.
* கொல்கத்தா ஈடன் கார்டனில் இந்த 2 அணிகளும் மோதிய கடைசி 5 ஆட்டங்களில் ஐதராபாத் 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
* இந்த 2 அணிகளும் மே 10ம் தேதி ஐதராபாத்தில் நடைபெறும் 60வது லீக் ஆட்டத்தில் மீண்டும் 2வது முறையாக மோத இருக்கின்றன.

The post ஐபிஎல் 15வது லீக் போட்டியில் எழுச்சி பெறுமா சன்ரைசர்ஸ்?: கொல்கத்தாவுடன் இன்று மோதல் appeared first on Dinakaran.

Related Stories: