சிறுகாவேரிப்பாக்கத்தில் தமாகா சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

 

காஞ்சிபுரம், ஏப்.2: காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிப்பாக்கத்தில் தமாகா சார்பில் தண்ணீர் பந்தலை தமாகாவின் காஞ்சி தெற்கு மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் திறந்து வைத்தார். கோடைக்காலம் துவங்கிய நிலையில் சில தினங்களாகவே வெயிலின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு கட்சி தரப்பினர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பல்வேறு பொது இடங்களில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து வருகின்றனர்.

அந்த வகையில், காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுகாவேரிப்பாக்கம், விநாயகபுரம் பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், அக்கட்சி மாநகர தலைவர் சங்கர், சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சி துணை தலைவர் அபிராமி சங்கர் ஆகியோர் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு நடைபெற்றது.

இதில், தமாகாவின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் தலைமை தாங்கி, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து வெள்ளரிப்பழம், தர்பூசணி, இளநீர், நுங்கு, குளிர்பானங்கள், மோர் உள்ளிட்ட பல்வேறு குளிர்ச்சி தரும் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாநில இளைஞரணி தலைவர் சங்கர், நிர்வாகிகள் கார்த்திக், சசிகுமார், சுகுமார், காளிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post சிறுகாவேரிப்பாக்கத்தில் தமாகா சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: