உத்திரமேரூரில் ரூ.22.61 கோடி மதிப்பில் நீதிமன்றம், நீதிபதிகள் குடியிருப்புக்கு அடிக்கல்

உத்திரமேரூர், மார்ச் 30: உத்திரமேரூரில் ரூ.22.61 கோடி மதிப்பீட்டில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நீதிபதிகள் குடியிருப்பு கட்டும் பணிக்கான அடிக்கல் கல்வெட்டினை, நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி காஞ்சிபுரம் மாவட்ட போர்ட்போலியோ நீதிபதி நீதியரசர் கே.முரளிசங்கர் திறந்து வைத்தார். மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய நிதியுதவி திட்டங்கள் 2024-2025 மூலம் உத்திரமேரூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு கட்டும் பணிக்கு ரூ.22.61 கோடி மதிப்பீட்டில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி, நீதிமன்ற கட்டடம் 2 தளங்களுடன் அமைக்கப்பட்டு, தரை தளத்தில் நீதிபதி வாகனம் நிறுத்தும் பகுதி, இருசக்கர வாகனம் நிறுத்தும் பகுதி, தபால் நிலையம் வங்கி, ஆவின், மருந்தகம், கழிப்பறை வசதிகளுடனும் முதல் தளத்தில் நீதித்துறை மாஜீஸ்திரேட் நீதிமன்ற அறை, ஸ்டெனோ, தலைமை எழுத்தர், நீதிமன்ற அலுவலகம், பொது வழக்குரைஞர் அறை, பதிவு அறை, சட்ட ஆலோசனை அறை, இ-தாக்கல் நீதிமன்றம், கழிப்பறை வசதிகளுடனும், 2ம் தளத்தில் மின்சார அறை, சட்ட உதவி அறை, நூலகம், எழுதுபொருள் அறை, சிசிடிவி கட்டுப்பாட்டு அறை, வழக்கறிஞர் சங்கம், நசீர் அறை, அரசு வழக்கறிஞர் அறை, நகல் தயாரிப்பாளர் அறை, கழிப்பறை வசதிகளுடனும் படிக்கட்டு, மின்தூக்கி வசதிகளுடன் 33700.32 சதுர அடியில் அமைக்கப்படவுள்ளது.

இதுபோல், நீதிபதி குடியிருப்பு கட்டடம் 2 தளங்களுடன் அமைக்கப்பட்டு, தரை தளத்தில் நீதிபதி வாகனம் நிறுத்தும் பகுதி, இருசக்கர வாகனம் நிறுத்தும் பகுதி மற்றும் கழிப்பறை வசதிகளுடனும், முதல் தளம் மற்றும் 2ம் தளங்களில் உணவருந்தும் அறை, படுக்கை அறை, சமையலறை, அலுவலகம், உதவியாளர் அறை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் 7327.56 சதுர அடியில் அமைக்கப்பட்டு, அனைத்துவித வசதிகளுடன் மொத்தம் 43416.60 சதுர அடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகள் அமைக்கப்படவுள்ளன.

இதனை தொடர்ந்து, உத்திரமேரூர் தனியார் மண்டபத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, காஞ்சிபுரம் மாவட்ட போர்ட்போலியோ நீதிபதி நீதியரசர் கே.முரளிசங்கர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு கட்டும் பணிக்கு குத்துவிளக்கேற்றி, அடிக்கல் கல்வெட்டை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் கே.குமரேஷ்பாபு, காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி செம்மல், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.சண்முகம், காஞ்சிபுரம் தலைமை குற்றவியல் நீதிபதி எம்.வசந்தகுமார், உத்திரமேரூர் நீதிமன்ற வளாக வழக்கறிஞர் சங்க தலைவர் ஏ.கருணாநிதி, உத்திரமேரூர் நீதிமன்ற வளாக சங்க செயலாளர் டி.கிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.

The post உத்திரமேரூரில் ரூ.22.61 கோடி மதிப்பில் நீதிமன்றம், நீதிபதிகள் குடியிருப்புக்கு அடிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: