சட்டவிரோத குடியேறிகளாக கருதக் கூடாது: கனிமொழி
ஒன்றிய அரசின் குடியுரிமை, வெளிநாட்டினர் முறைப்படுத்துதல் மசோதாவால் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழர்களின் நலனை காக்கும் வகையில் தேவையான திருத்தங்களை மசோதாவில் கொண்டு வர வேண்டும். இலங்கையில் இருந்து வந்த தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். சொந்த நாட்டுக்கு செல்ல முடியாத நிலையில் இந்தியாவில் தங்கியுள்ளவர்களை சட்டவிரோத குடியேறிகளாக கருதக் கூடாது என கூறினார்.
அடிப்படை உரிமைகளை பறிப்பதாக மசோதா உள்ளது: கனிமொழி
குடியுரிமை மசோதா அடிப்படை உரிமைகளை பறிப்பதுடன் அரசின் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வகை செய்கிறது. நீதிமன்றங்களின் கண்காணிப்புக்கான வாய்ப்பை குறைப்பதுடன், தன்னிச்சையாக அரசு முடிவெடுக்கவும் மசோதா வகை செய்கிறது. அந்நிய நாட்டவர் என்று ஒருவரை வெளியேற்றுவதற்கு முன் அவரது தரப்பு நியாயங்களை கேட்க மறுப்பது நீதிக்கு புறம்பானது. கல்வி நிலையங்கள், பல்கலை.கள், மருத்துவமனைகள் போன்றவற்றை அரசின் கண்காணிப்பு ஏஜெண்டுகளாக மாற்றுகிறது மசோதா. இந்திய மீனவர்கள் அந்நிய ராணுவத்தால் கைது செய்யப்படுவதை தடுக்க ஒன்றிய அரசால் முடியவில்லை. இலங்கைச் சிறைகளில் மாதக் கணக்கில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை மீட்க முடியவில்லை என கனிமொழி கூறியுள்ளார்.
The post சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் இந்தியாவில் தங்கியுள்ளவர்களை சட்டவிரோத குடியேறிகளாக கருதக் கூடாது: கனிமொழி எம்.பி. உரை!! appeared first on Dinakaran.