இன்று பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிப்பு

சென்னை: இன்று பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து வெளியான அரிக்கியில்; “ஹிஜ்ரி 1446 ரமலான் மாதம் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 30-03-2025 தேதி அன்று மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்பட்டது.

ஆகையால் திங்கட்கிழமை ஆங்கில மாதம் 31-03-2025 தேதி அன்று ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

ஆகையால் ஈதுல் பித்ர் திங்கட்கிழமை 31-03-2025 தேதி கொண்டாடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இன்று பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: