கோவையில் சர்வதேச கிரிக்கெட் அரங்கம், சென்னையில் உலகளாவிய விளையாட்டு நகரம் :விளையாட்டு மேம்பாட்டுத்துறை

சென்னை : முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கங்கள், 19 சட்டமன்ற தொகுதிகளில் நிறுவப்பட்டு வருகின்றன என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் வெளியான அறிவிப்புகள்

*சேப்பாக்கம், சோழவந்தான், ஸ்ரீவைகுண்டம், காரைக்குடி உள்பட 9 தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கம் தொடங்கப்பட்டன. 2-ம் கட்டமாக உத்திரமேரூர், மேட்டூர், கலசப்பாக்கம், தாராபுரம், தாம்பரம் உள்பட 19 தொகுதிகளில் நிறுவப்பட உள்ளன.

*கோவை சிங்காநல்லூர் சர்வதேச கிரிக்கெட் அரங்கம் தொடர்பாக மதிப்பீடு குறிப்புகள் முன்மொழியப்பட்டன. இந்தியா, சர்வதேச கிரிக்கெட் மைதானங்களுடன் ஒப்பிட்டு ஆலோசகர்கள் மதிப்பீடு குறிப்புகளை முன்மொழிந்துள்ளனர். சிங்காநல்லூரில் 28.36 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு அரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

*சென்னையில் உலகளாவிய விளையாட்டு நகரம் நிறுவ தொழில்நுட்ப பொருளாதார சாத்திய கூறு அறிக்கை முடியும் நிலையில் உள்ளது. உலகத்தரம் வாய்ந்த ஆடுகளங்கள், உள்கட்டமைப்பு வசதிகளுடன் உலகளாவிய விளையாட்டு நகரம் நிறுவப்பட உள்ளது. வெளிப்புற, உட்புற விளையாட்டு அரங்கங்கள், ஒலிம்பிக் அளவு நீச்சல் குளம், விளையாட்டு அகாடமிகள் இருக்கும். செம்மஞ்சேரியில் 100 ஏக்கர் கொண்ட பொருத்தமான நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

*கரூர், மதுரையில் நவீன வசதிகளுடன் கூடிய நீச்சல் குளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

*நகர்ப்புறங்களில் ரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு விளையாட்டு உபகரண தொகுப்பு வழங்கப்படும். கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி 12,525 கிராம பஞ்சாயத்துகளுக்கு 16,798 விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. 2025ம் ஆண்டில் 12,838 நகர்ப்புற வார்டுகளுக்கு 19,429 உபகரண தொகுப்புகள் விநியோகம் செய்யப்படும்.

The post கோவையில் சர்வதேச கிரிக்கெட் அரங்கம், சென்னையில் உலகளாவிய விளையாட்டு நகரம் :விளையாட்டு மேம்பாட்டுத்துறை appeared first on Dinakaran.

Related Stories: