டாக்டர் ஆர்.கே. சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியி தமிழ் வளர்ச்சித் துறையின் “தமிழால் முடியும்” வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி

சென்னை: தமிழ் வளர்ச்சித் துறையின் “தமிழால் முடியும்” வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி 26.03.2025 முதல் 28.03.2025 வரை கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலியில் உள்ள டாக்டர் ஆர்.கே. சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

“தமிழால் முடியும்” என்ற வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சியில் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலுள்ள கல்லூரிகளில் தமிழ், தமிழிலக்கியத்தில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பினை பயிலுகின்ற 200 மாணவ மாணவியர் பங்கேற்று பயிற்சி பெறவுள்ளனர். இப்பயிற்சியின் முதல்நாள் நிகழ்வு 26.03.2025 அன்று முற்பகல்
10.00 மணிக்கு தொடங்க உள்ளது. மூன்று நாள் நடைபெறவுள்ள பயிற்சியில் ஊடகத்தமிழ் என்ற தலைப்பில் திரு.கோவி லெனின், கவிஞர் ராசி அழகப்பன், முனைவர் சு. பிரேம்குமார், கவிஞர் கங்கை மணிமாறன், முனைவர் இரா. சங்கர், வை. பிந்து, ர. சுபலட்சுமி ஆகியோரும் தமிழும் மொழிபெயர்ப்பும் என்ற தலைப்பில் கே.வி. ஷைலஜா, அசதா, பாவலர் சு. வேலாயுதம், பவா செல்லதுரை, முத்தமிழன் சை. அ. சையத் அஜ்மல் தஹசீன், அ. மதிவாணன், பெ. பாண்டியன், பா. பன்னீர்செல்வம் ஆகியோரும் கணினித்தமிழ் என்ற தலைப்பில் முனைவர் க. சண்முகம், முனைவர் கு. இலட்சுமி, கவிதாயினி திருமதி காயத்ரி, முனைவர் ம. எஸ்தர் ஜெகதீசுவரி ஆகியோரும் போட்டித்தேர்வுகளில் தமிழ் என்ற தலைப்பில் முத்துவேலு இராமமூர்த்தி, செல்வி ஜெ. மீனாட்சி, முனைவர் ப. தாமரைக்கண்ணன், சு. இராமகிருஷ்ணன், பேராசிரியர் இரா. பிரவீனா ஆகியோரும் பயிற்சி அளிக்கவுள்ளனர்.

டாக்டர் ஆர்.கே.சண்முகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் மரு. க. மகுடமுடி, நிர்வாக அலுவலர், முதல்வர் முனைவர் கு. மோகனசுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்ற உள்ளனர். தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ஒளவை அருள் அவர்கள் பயிற்சியில் பங்குபெறும் மாணாக்கர்களுக்கு சான்றிதழ் வழங்கி நிறைவுரையாற்ற உள்ளார்.

The post டாக்டர் ஆர்.கே. சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியி தமிழ் வளர்ச்சித் துறையின் “தமிழால் முடியும்” வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: