சென்னை: சாலை விபத்தில் உயிரிழந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வந்த தமிழ்ச்செல்வன் விபத்தில் உயிரிழந்தார்.