சென்னையில் கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்களுடன் திடீர் கலந்துரையாடல்

சென்னை: சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சென்னை தி.நகரில் உள்ள தனியார் உணவு விடுதியில் மதிய உணவு அளித்து தனது ஆதரவாளர்களுடன் நேற்று கலந்துரையாடல் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் அருள் பெத்தையா, முன்னாள் மாவட்ட பொருளாளர் தி.நகர் ஸ்ரீராம், ஓபிசி பிரிவின் மாநில துணைத்தலைவர் துறைமுகம் ஆர்.ரவிராஜ் மற்றும் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் அளித்த பேட்டி:

சென்னையில் இருந்த கட்சி நண்பர்களை ஞாயிற்றுக்கிழமை மதிய உணவுக்காக அழைத்திருந்தேனே தவிர, இந்த சந்திப்பில் வேறெந்த காரணமும் இல்லை. வெறும் மக்கள் தொகையை மட்டும் அடிப்படையாக வைத்து பாராளுமன்ற சீட்டை நிர்ணயம் செய்தார்கள் என்றால் தென்னகம் பாதிக்கும். அதை முன்கூட்டியே அறிந்து மற்ற மாநிலங்களுடன் ஒருமித்த கருத்தை உருவாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த முயற்சியை நாங்கள் ஆதரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post சென்னையில் கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்களுடன் திடீர் கலந்துரையாடல் appeared first on Dinakaran.

Related Stories: