பாஜவுக்கு விசுவாசம் காட்டுகிறார் மாநிலத்திற்கு விசுவாசமாக அண்ணாமலை இல்லை: கர்நாடக துணை முதல்வர் பேட்டி

சென்னை: அண்ணாமலை பேசுவது முக்கியமல்ல. பிரதமரும் உள்துறை மந்திரியும் பேசுவதுதான் முக்கியம். அண்ணாமலைக்கு அவருடைய பாஜ கட்சி மட்டும் தான் முக்கியம். மற்ற எதுவும் அவருக்கு தெரியாது என்று கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் கூறினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று முன்தினம் நடத்திய மாநில முதலமைச்சர்கள் மற்றும் மாநில கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னைக்கு வந்த கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று பெங்களூரு புறப்பட்டு சென்றார்.

அப்போது, அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: எந்த திட்டமும் இல்லாமல் நேற்றைய கூட்டம் நடந்ததாக, அண்ணாமலை கூறியுள்ளார். இந்த பிரச்னையில் அண்ணாமலை முக்கியமானவரில்லை. இதுகுறித்து பிரதமரும், உள்துறை அமைச்சரும் இந்த நாட்டுக்கு என்ன சொன்னார்கள் என்பதுதான் முக்கியம். அண்ணாமலைக்கு இதுகுறித்து எல்லாம் எதுவும் தெரியாது. அவர், அவருடைய பாஜ கட்சிக்கு மட்டுமே வேலை செய்கிறார். கட்சிக்கு அதிக விசுவாசம் காட்டுகிறார்.

அவர் மாநிலத்திற்கு விசுவாசமாக இல்லை. அவர் அவருடைய கட்சி வேலையை செய்யட்டும்.மாநில சட்டசபை தொகுதிகள் மறுசீரமைப்பு பிரச்னை குறித்து, தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசி இருக்கிறார். முதலில் நமது ஒருங்கிணைந்த குரலை வலுவானதாக்குவோம். மாநிலத்தில் காங்கிரஸ் இருக்கிறார்கள். அவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இது திமுக அரசு சிறப்பாக ஏற்பாடு செய்த கூட்டம். 40 முதல் 50 அரசியல் கட்சிகளை முதலமைச்சர் அழைத்திருந்தார். தென்னிந்தியாவை சேர்ந்த அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களை சேர்ந்ததவர்களும் கலந்து கொண்டார்கள். அவர்கள் தங்கள் பணியை செய்கின்றார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

* எந்த திட்டமும் இல்லாமல் நேற்றைய கூட்டம் நடந்ததாக, அண்ணாமலை கூறியுள்ளார். இந்த பிரச்னையில் அண்ணாமலை முக்கியமானவரில்லை. இதுகுறித்து பிரதமரும், உள்துறை அமைச்சரும் இந்த நாட்டுக்கு என்ன சொன்னார்கள் என்பதுதான் முக்கியம். அண்ணாமலைக்கு இதுகுறித்து எல்லாம் எதுவும் தெரியாது.

The post பாஜவுக்கு விசுவாசம் காட்டுகிறார் மாநிலத்திற்கு விசுவாசமாக அண்ணாமலை இல்லை: கர்நாடக துணை முதல்வர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: