விளையாட்டு போட்டி துவக்க விழாவில் தேசிய கீதத்தை அவமதித்த நிதிஷ் குமார்: பீகார் பேரவையில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ் கலந்து கொண்டார். மேடையில் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அனைவரும் மரியாதை செய்ய முயன்ற போது, அங்கிருந்த முதல்வர் நிதிஷ் குமார் திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்து நேராக நடந்து சென்றார். அதனால் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேடைக்கு அருகே நின்றிருந்த சிலரை பார்த்து நிதிஷ் கைகுலுக்கினார்.

பின்னர் சுதாரித்துக் கொண்ட முதல்வர், மீண்டும் மேடைக்கு வந்ததும் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது சிரித்துக்கொண்டே நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை நோக்கி கையசைத்தார். இதையடுத்து தேசிய கீதத்தை முதல்வர் அவமதித்துவிட்டதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக பீகார் சட்டப்பேரவையில், நேற்று கடும் அமளி எற்பட்டது. நிதிஷ்குமாரின் மன நிலை குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால், பலமுறை அவை ஒத்தி வைக்கப் பட்டது.

The post விளையாட்டு போட்டி துவக்க விழாவில் தேசிய கீதத்தை அவமதித்த நிதிஷ் குமார்: பீகார் பேரவையில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: