கோவை: ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் (வண்டி எண் 06027) வரும் 30ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.20க்கு புறபட்டு பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக போத்தனூர் ரயில் நிலையத்திற்கு காலை 8 மணிக்கு வந்தடையும்.
கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் வரும் 31ம் தேதி இரவு 11.30 மணிக்கு கிளம்பும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06028) திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக ஏப்ரல் 1ம் தேதி காலை 8.20 மணிக்கு சென்னை ரயில் நிலையத்திற்கு சென்றடையும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கோவை-சென்னைக்கு 2 நாட்கள் சிறப்பு ரயில் appeared first on Dinakaran.