ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள் சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் குறித்து காலமுறை ஆய்வு..!!

சென்னை: ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள் சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) சென்னையில் ஏற்கனவே நிதியுதவி செய்து வரும் மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டம் திட்டத்திற்கான காலமுறை ஆய்வு பணிக்காக சென்னை வந்துள்ளது. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு இரண்டாம் கட்ட திட்டங்களுக்கு நிதியுதவி அளித்து வரும் நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் குழுவுடன் இணைந்து சென்னையில் இன்று (28.03.2025), தாம்பரம் மற்றும் கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பல மாதிரி ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கிய முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர்.

​கூடுதலாக, பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையிலும், கோயம்பேடு முதல் ஆவடி வரையிலும் சென்னைமெட்ரோ ரயில் நிறுவனத்தின் குழுவுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் திட்டக் குழுத் தலைவர் வென்யு-கு, நிதியியல் மேலாண்மை சிறப்புநிபுணர் யி கெங், திட்ட ஆலோசகர் மூஹ்யூன் சோ, சமூக மேம்பாட்டு சிறப்பு நிபுணர் சிவராம கிருஷ்ண சாஸ்திரி ஜோஸ்யுலா, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொதுமேலாளர்கள் ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), எஸ்.அசோக் குமார், (வழித்தடம்மற்றும் உயர்மட்ட கட்டுமானம்), மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். நிதியுதவி செய்வதில் பிற பன்னாட்டு வங்கிகளும் இதே போன்ற ஆர்வத்தை காட்டி வருகின்றன. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள் சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் குறித்து காலமுறை ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: