இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசிய திமுக எம்.பி. வில்சன் தொகுதி மறுசீரமைப்பு பற்றி நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் வருகின்ற 22-ம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.
The post தொகுதி மறுசீரமைப்பு பற்றி நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்க வேண்டும்: திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.