சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசின் எல்லோருக்கும் எல்லாம் என்ற நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி அளவும் தமிழ்நாட்டை 2030ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் கோடி டாலர் வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளாகும். கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களின் உடல் நலனை பேணும் வகையில் அவர்களுக்கு முழு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அடையாள அட்டை வழங்கப்படும் என்பது மிகுந்த வரவேற்குரிய திட்டமாகும். இத்திட்டத்தை அறிவித்த முதலமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அது போல கட்டுமான தொழிலாளர்களுடைய பிள்ளைகள் பயில்வதற்காக தங்கும் வசதியுடன் கூடிய ஏழு தொழிற்பயிற்சி நிறுவனங்களைத் தொடங்குவதற்கும் அறிவிப்பு செய்யப்பட்டிருப்பதும் பாராட்டி வரவேற்கத்தக்கதாகும்.
The post கட்டுமான தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை திட்டம்: விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி வரவேற்பு appeared first on Dinakaran.