தமிழ்நாட்டைச் சேர்ந்த 80% தேர்வர்களுக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக புகார்..!!

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த 80% தேர்வர்களுக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ரயில் உதவி ஓட்டுநர் தேர்வுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ரயில் என்ஜின் உதவி ஓட்டுநர் பணிக்கு தமிழ்நாட்டில் 493 காலிப் பணியிடங்கள் இருப்பதாக 2024 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது.

ரயில் உதவி ஓட்டுநர் தேர்வுக்கு தமிழ்நாட்டில் இருந்து 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். CBT2 என்ற 2ம் கட்ட கணினி முறைத் தேர்வு 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 80% தேர்வர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டதற்கு தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.

The post தமிழ்நாட்டைச் சேர்ந்த 80% தேர்வர்களுக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக புகார்..!! appeared first on Dinakaran.

Related Stories: