பர்கூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் பலி

கிருஷ்ணகிரி, மார்ச் 11: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா நேரலக்கோட்டை காப்புக்காடு பகுதியில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, குடிநீர் தேடி வந்த புள்ளிமான் ஒன்றை, அப்பகுதியைச் சேர்ந்த நாய்கள் துரத்தின. நாய்களிடம் இருந்து தப்பிக்க ஓடிய போது, பர்கூர் அடுத்த சீனவாசபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில், அந்த மான் தவறி விழுந்தது. தகவலறிந்து பர்கூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையில் வீரர்கள் கோவிந்தசாமி, பொன்மணி, சந்தோஷ் ஆகியோர், கிணற்றில் கயிறு கட்டி இறங்கினர். ஆனால், அதற்குள் அந்த மான் இறந்திருந்தது. இறந்த மானை மீட்டு, வன அலுவலர் ஜோதி கணேசிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த மானை புதைத்தனர்.

The post பர்கூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் பலி appeared first on Dinakaran.

Related Stories: