ஓசூர், மார்ச் 8: ஓசூர் அருகே பண்ணைக்குட்டையில் மூழ்கி பலியான தலைமை ஆசிரியர் மற்றும் மாணவன் குடும்பத்தினருக்கு தலா ₹3 லட்சத்திற்கான காசோலையை சப்கலெக்டர் மற்றும் எம்எல்ஏ வழங்கினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், எலுவப்பள்ளி கிராமம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்த மாணவர் நித்தீஷ்குமார்(8), பள்ளி தலைமை ஆசிரியர் கௌரிசங்கர்(53) ஆகிய இருவரும் பள்ளி அருகிலுள்ள பண்ணை குட்டையில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து கடந்த 5.3.2025ம் தேதி அன்று உயிரிழந்தனர். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, தலா ₹3 லட்சம் நிவராண உதவி அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து இதற்கான காசோலையை உயிரிழந்தோரின் குடும்பத்தாரிடம் நேற்று ஓசூர் சப்கலெக்டர் பிரியங்கா முன்னிலையில், பிரகாஷ் எம்எல்ஏ வழங்கினார். அப்போது, தாசில்தார் சின்னசாமி மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post ஹெச்எம், மாணவன் குடும்பத்திற்கு தலா ₹3 லட்சத்திற்கான காசோலை appeared first on Dinakaran.