போச்சம்பள்ளி, மார்ச் 8: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் சோப்பனூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதில், ஒரு பாடலுக்கு அரசியல் கட்சி துண்டுகளை கழுத்தில் அணிந்து கொண்டு மாணவர்கள் நடனமாடினர். இதுகுறித்து காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் திருமுருகன் நாகரசம்பட்டி போலீசில் புகாரளித்தார். அதில், அரசு பள்ளியில் மாணவர்கள் கட்சி துண்டு அணிந்து நடனமாடியது கண்டிக்கத்தக்கது. ஒரு அரசு பள்ளியில் இதுபோன்ற சம்பவம் வருத்தத்தை அளிக்கிறது. இதற்கு காரணம் யார் என்பதையும், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது கல்வி நிர்வாகம் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்.
The post பள்ளி ஆசிரியர்கள் மீது வி.சி.க., போலீசில் புகார் appeared first on Dinakaran.