சென்னை : ஜி.எஸ்.டி. வரியை ஒன்றிய அரசு விதிக்கிறது; எனவே விலைவாசி உயர்வுக்கு அதுவே காரணம் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சாத்தனூர் அணை சரியான நேரத்தில் திறக்கப்பட்ட காரணத்தால்தான் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அணையை தாமதமாக திறந்திருந்தால் திருவண்ணாமலையில் பல பேர் இறந்திருப்பார்கள் என்றும் அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்.