மதுரை: தந்தை பெரியார் பற்றிய சீமான் கருத்து சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சீமான் மீதான புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜனவரி 20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை அண்ணா நகர் காவல் துறைக்கு நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார்.