×

அறந்தாங்கியில் சமத்துவ பொங்கல் விழா

 

அறந்தாங்கி, ஜன. 6: அறந்தாங்கியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலை அருகே நகர செயலாளர் சிவக்குமார் தலைமையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செங்கோடன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்டத் தலைவர் விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

The post அறந்தாங்கியில் சமத்துவ பொங்கல் விழா appeared first on Dinakaran.

Tags : Equality Pongal festival ,Aranthangi ,Equality Pongal ,All India Youth Forum ,City Secretary ,Sivakumar ,Pattukottai Road, Aranthangi ,
× RELATED வளையக்கரணை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்