×

திருச்சி கேகே நகரில் வீடு புகுந்து நகை கொள்ளை

 

திருச்சி, ஜன.8: திருச்சியில் வீடு புகுந்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த கும்பலை போலீசார் ேதடுகின்றனர். திருச்சி கே.கே. நகர் எல்ஐசி காலனியை சேர்ந்தவர் லீலாவதி(75), தனியாக வசித்து வருகிறார். கடந்த 4ம் தேதி தன் உறவினர் வீட்டுக்கு சென்ற லீலாவதி, நேற்று காலை மீண்டும் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 13.5 சவரன் நகை மற்றும் ₹60 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த லீலாவதி சம்பவம் குறித்து கேகே நகர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருச்சி கேகே நகரில் வீடு புகுந்து நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Trichy KK Nagar ,Trichy ,Trichy KK Nagar LIC Colony ,Leelavathi ,
× RELATED கரூர்-திருச்சி பைபாஸ் சாலையில்...