- லப்பைக்குடிகாடு டவுன் பஞ்சாயத்து நியாய விலைக்கடைகள்
- குன்னம்
- டவுன் பஞ்சாயத்து
- ஜாகிர் உசேன்
- துணை தலைவர்
- ரசூல் அகமது
- கிழக்கு மஹல்லா
- ஷம்சுதீன்
- வீட்டில்
- பாஷா
- தின மலர்
குன்னம், ஜன. 10: லப்பைக்குடிக்காடு பேரூராட்சி நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. பேரூராட்சி மன்ற தலைவர் ஜாகிர் உசேன் தலைமையில் துணை தலைவர் ரசூல் அஹமது, கிழக்கு மஹல்ல தலைவர் சம்சுதீன், அவைத் தலைவர் பாஷா, கவுன்சிலர்கள் இப்ராஹீம் ஷேட், அப்துல்லா பாஷா ஆகியோர் பொது மக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருமாந்துறை ஊராட்சி நோவா நகர் நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பினை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பெரு கருப்பையா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கழக கூட்டுறவு வங்கி செயலாளர். விற்பனையாளர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் அத்தியூர், துங்கபுரம், வேப்பூர், ஆய்குடி உட்பட வேப்பூர் வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை வங்கி நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
The post லப்பைக்குடிக்காடு பேரூராட்சி நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் appeared first on Dinakaran.