அரியலூர், ஜன. 8: அரியலூர் மாவட்டத்தில் ஆளுநரைக் கண்டித்து திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து திமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநர் என்றும். அவரை காப்பாற்றும் அதிமுக- பாஜக கள்ள கூட்டணி என்றும், கெட் அவுட் ரவி என்று அரியலூர் மாவட்ட திமுக கட்சியினரால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இதில், sir நான் கோஷம் போடுறேன்… நீங்க வெளிய போய்டுங்க என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுவது போலவும் சூப்பர்யா… நீ தான்யா உண்மையான விசுவாசி என ஆளுநர் ரவி கூறுவது போல் கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது. இதனை பாஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மறைந்திருந்து அதிர்ச்சியுடன் எட்டிப் பார்பது போல் கார்ட்டூன் படம் போட்டுள்ளனர். இந்த போஸ்டர் அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.
The post அரியலூர் மாவட்டத்தில் ஆளுநரை கண்டித்து திமுக சார்பில் போஸ்டர் appeared first on Dinakaran.