×

கலைத்திருவிழாவில் மாநில அளவில் பங்கேற்ற மாணவனுக்கு வட்டார கல்வி அலுவலர் பாராட்டு

 

தா.பழூர், ஜன. 7: தமிழக அரசு சார்பில் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் கலைத் திருவிழா போட்டிகள் நடத்த அறிவுறுத்தி இருந்தது. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான ஒரு வாய்ப்பாக இது அமைந்தது. இதில், 1-5 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பிரிவில் பள்ளி அளவில், வட்டார அளவிலும், மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இதில், தா.பழூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பிலும் மாணவன் சித்தார் என்பவர் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்று தேசபக்தி பாடலை வெல்லுவேன் என்று நம்பிக்கையோடு கலந்து கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் மாணவர்கள் அனைவரும் இதுபோல் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என அனைத்து மாணவர்களுக்கும் அறிவுரைகள் வழங்கி மாநில அளவில் கலந்து கொண்ட மாணவன் சித்தார்த்திற்க்கு வட்டார கல்வி அலுவலர் ஆனந்தி பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பிளமன்ராஜ் உடன் இருந்தார்.

 

The post கலைத்திருவிழாவில் மாநில அளவில் பங்கேற்ற மாணவனுக்கு வட்டார கல்வி அலுவலர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Tha. Palur ,Tamil Nadu Government ,Dinakaran ,
× RELATED திருத்தணி பகுதியில் கல்குவாரிகளில் டிரோன் சர்வே