பெரம்பலூர், ஜன.8: காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து, மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத் தினர் 33 பேர் கைது செய்யப்பட்டனர். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊராட்சி செயலர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அன்புராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கோரிக்கை முழக்க கோஷங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உட்பட 33 பேரை பெரம்பலூர் நகர போலீஸார் கைது செய்தனர்.
The post ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் பெரம்பலூரில் 33 பேர் கைது appeared first on Dinakaran.