- அரசு மேல்நிலைப்பள்ளி
- ராஜபாளையம்
- சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
- மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம்
- புன்னகை அறக்கட்டளை
- தின மலர்
ராஜபாளையம், ஜன.10: ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஸ்மைல் பவுண்டேஷன் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். போதை பழக்கத்தில் தாக்கங்கள் குறித்து சத்திரப்பட்டி சுகாதார ஆய்வாளர் ஹரிஹரசுதன் விளக்க உரை ஆற்றினார்.
மாவட்ட நீதிபதி சேர்மன் திலகம், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும், போதை பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்று கூறினார். முடிவில் பள்ளி மாணவர்களுடன் உறுதிமொழி எடுக்கப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். விழா ஏற்பாடுகளை சமூக சுகாதார அலுவலர் ராஜ்குமார், மாவட்ட இளைஞர் நல அலுவலர் ஞானச்சந்திரன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
The post அரசு மேல்நிலை பள்ளியில் போதை ஒழிப்பு கருத்தரங்கு appeared first on Dinakaran.