×

நீலகிரி போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டுகோள்

 

ஊட்டி,ஜன.10: நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது:நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும்,புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.

ஆனால் தற்போது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல்,கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.

வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. எனவே போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். புகையில்லா போகி கொண்டாடுவோம். சுற்றுசூழலை பேணி காப்போம். இவ்வாறு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

The post நீலகிரி போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Bhogi festival ,Nilgiris ,Lakshmi Bhavya Tansari ,Pongal festival ,Bhogi ,
× RELATED போகிப் பண்டிகையை ஒட்டி பிளாஸ்டிக்,...