- TNPSC
- Tadco
- தமிழ்நாடு பொதுச் சேவை ஆணையம்
- லட்சுமி பவ்யா தனியாரு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- TNPSC குழு
- தின மலர்
ஊட்டி, ஜன. 9: தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து, கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் முன்னெடுப்பாக முன்ணனி பயிற்சி நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கவுள்ளது. குரூப் 2 மற்றும் 2ஏ முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்விற்கு தேர்ச்சி பெற விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியினை பெற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 21 வயது முதல் 32 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவரை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகை தாட்கோவால் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும், விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
The post தாட்கோ மூலம் டிஎன்பிஎஸ்சி, குரூப் 2 தேர்வுக்கு பயிற்சி appeared first on Dinakaran.