கோத்தகிரி, ஜன.8: கோத்தகிரி அதன் சுற்றுவட்டார சாலையில் ஜனாதிபதி வருகையின்போது அகற்றப்பட்ட வேகத்தடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் ஜனாதிபதி மூன்று நாட்கள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வந்து ஊட்டியில் உள்ள ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் தங்கினார். இவரது பயணமானது கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக இருந்தது. அப்போது, கோவையில் இருந்து மேட்டுப்பாளையம், கோத்தகிரி மலைப்பாதை வழியாக ஊட்டிக்கு வந்தார். குடியரசு தலைவர் வருகையின்போது மலைப்பாதையில் இருந்த வேகத்தடைகள் அனைத்தும் அகற்றப்பட்டது.
குடியிருப்பு தலைவரின் வருகையையொட்டி ஆபத்து நிறைந்த பகுதிகளில் இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்ட நிலையில் தற்போது, கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் அறிவுறுத்தலின்படி, உதவி கோட்ட பொறியாளர் சங்கர் லால், உதவி பொறியாளர் ரமேஷ் தலைமையிலான நெடுஞ்சாலை துறையினர் கோத்தகிரி நகர் பகுதி முதல் கல்வி நிலையங்கள் இருக்கும் இடங்களான காமராஜர் சதுக்கம், மார்க்கெட் பகுதி, பேருந்து நிலையம் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்கும் பணியினை கோத்தகிரி நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
The post கோத்தகிரி பகுதியில் வேகத்தடை அமைக்கும் பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.