1வது வார்டு கவுன்சிலர் பிரகாஷ் பேசுகையில், ஆவடி மாநகராட்சியை பொறுத்தவரை, எங்கு பார்த்தாலும் கழிவுநீர்தான் ஓடுகிறது. 18 ஆண்டுகளுக்கு முன் பாதாள சாக்கடை திட்டம் துவக்கப்பட்டது. பல இடங்களில் இன்னும் இணைப்பு கொடுக்கவில்லை என்றார். 6வது வார்டு கவுன்சிலர் பைரவி பேசுகையில், தி.மு.க., ஆட்சி வந்தபின்தான் அனைத்து இடங்களிலும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உங்கள் வார்டில் என்ன பிரச்னையோ அதை மட்டும்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்றார். இதனால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து கூட்டம் முடிந்தது. கூட்டத்தில் மொத்தம் 131 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post ஆவடி மாநகராட்சியில் முதல் மாமன்ற கூட்டம்: கவுன்சிலர்கள் காரசார விவாதம் appeared first on Dinakaran.