×

நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படை

கவுகாத்தி: வடகிழக்கு மாநிலமான அசாமில் திமா ஹசாவோ மாவட்டத்தின் உமராங்சோ பகுதியில் 300 அடி ஆழம் கொண்ட சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது. இதில், ‘ரேட் ஹோல்’ எனப்படும் எலி வளை என்ற முறையில் சுரங்கத்தில் உள்ள நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். இந்த சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் சரிந்து விழுந்தது. இதில் 9 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இந்த பணியில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

ஆனால், சுரங்கத்தில் சிக்கியுள்ள மற்ற தொழிலாளர்கள் உயிருக்கு போராடி வருகின்றனர். அவர்களை மீட்க தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களை மீட்கும் பணியில் ஒரு அதிகாரியையும் 11 மாலுமிகளையும் கொண்ட ஒரு சிறப்பு குழுவை இந்திய கடற்படை ஈடுபடுத்தியுள்ளது. சிறப்பாக பயிற்சி பெற்ற இந்த குழுவினர், ஆழமான பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் திறமை பெற்றவர்கள். இவர்கள், ஆழமான டைவிங் கியர்கள், நீருக்கடியில் ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனங்கள் (ஆர்.ஓ.வி) போன்ற சிறப்பு உபகரணங்களை பயன்படுத்துகின்றனர். மேலும் இந்திய ராணுவம், தேசிய பேரிடர் படையினரும், உள்ளூர் நிர்வாகத்துடனும் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயல்படுகிறது.

The post நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படை appeared first on Dinakaran.

Tags : Indian Navy ,Guwahati ,Umarangso ,Dima Hasao district ,Assam ,Dinakaran ,
× RELATED அசாம் மாநிலத்தில் நிலக்கரி...