புதுடெல்லி: காவல்துறை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியது. அதன் அடிப்படையில் காவல்துறை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மட்டும் ரத்துசெய்ய கோரி தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கறிஞர் குமணன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். மேல்முறையீடு மனுவில், ‘‘முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு தமிழ்நாடு காவல்துறை காரணமில்லை. ஒன்றிய அரசின் என்.ஐ.சி நிர்வாக குறைபாடே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. எனவே, காவல்துறை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
The post அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு appeared first on Dinakaran.