×

ராமர் கோயில் கட்டப்பட்டு ஓராண்டு நிறைவு: அயோத்தியில் நாளை முதல் 3 நாள் விழா

அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழா கடந்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி கோலாகலமாக நடந்தது.பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் நாட்டின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கோயிலின் முதலாம் ஆண்டு விழாவை நாளை முதல் ( 11ம் தேதி) 3 நாட்களுக்கு விழாவை கொண்டாட, கோயிலை நிர்வகித்து வரும் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை முடிவெடுத்துள்ளது. 3 நாள் விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. கலாசார நிகழ்ச்சிகள்,பாரம்பரிய நடைமுறைகள் மற்றும் ராமர் கதாகாலேட்சபம் உள்ளிட்வை நடக்கின்றன. 3 நாள் விழாவையொட்டி அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

The post ராமர் கோயில் கட்டப்பட்டு ஓராண்டு நிறைவு: அயோத்தியில் நாளை முதல் 3 நாள் விழா appeared first on Dinakaran.

Tags : Ram ,Temple ,festival ,Ayodhya ,Ram Temple ,Ayodhya, Uttar Pradesh ,Modi ,
× RELATED கடுமையான விமர்சனங்களை ஏத்துக்கணும்: ஷங்கர்