×

ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம் மேலும் ஒரு விவசாயி தற்கொலை: பஞ்சாப் எல்லையில் பதற்றம்

பாட்டியலா: பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், கடன் தள்ளுபடி, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் போலீஸ் வழக்குகளை திரும்பப் பெறுதல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாக ஒன்றிய அரசை வலியுறுத்தி விவசாயிகள் கடந்த பிப்ரவரி 13ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுவதற்கு டெல்லி நோக்கி சென்ற விவசாயிகளை பாதுகாப்பு படையினர் பஞ்சாப்- அரியானா எல்லையில் தடுத்து நிறுத்தினர்.

இதனால் சம்பு மற்றும் கனோரி ஆகிய எல்லை பகுதிகளில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பஞ்சாபை சேர்ந்த ரேஷம் சிங்(55) என்ற விவசாயி சம்பு எல்லையில் நேற்று காலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ரேஷம் சிங்கின் தற்கொலையால் சம்பு எல்லைப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 18ம் தேதி ரஞ்சோத் சிங் என்ற விவசாயி சம்பு எல்லையில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம் மேலும் ஒரு விவசாயி தற்கொலை: பஞ்சாப் எல்லையில் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Punjab border ,Patiala ,Swaminathan Commission ,Dinakaran ,
× RELATED அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு...