- பிரியங்கா
- பாஜக
- பிதுரி
- புது தில்லி
- டெல்லி சட்டமன்றத் தேர்தல்கள்
- ரமேஷ் பிதுரி
- தில்லி
- கல்காஜி
- முதல் அமைச்சர்
- ஆம் ஆத்மி கட்சி
- அதிஷி
- தின மலர்
புதுடெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மியின் வேட்பாளருமான அதிஷியை எதிர்த்து டெல்லியின் கல்காஜி தொகுதியில் பாஜ வேட்பாளர் ரமேஷ் பிதுரி போட்டியிடுகின்றார். இந்நிலையில் பிரசாரத்தின்போது பேசிய ரமேஷ் பிதுரி, கல்காஜி தொகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் பிரியங்கா காந்தியின் கன்னங்களை போல மாற்றுவேன் என்று கூறியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்புக்களில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் வயநாடு எம்பியான பிரியங்கா காந்தி, பிதுரியை கிண்டல் செய்யும் வகையில் பேசினார். ‘‘பிதுரி தனது சொந்த கன்னங்களை குறித்து பேசவில்லை. இது ஒரு அபத்தமான கருத்து. இது போன்ற பொருத்தமற்ற விஷயங்களுக்கு பதிலாக டெல்லி சட்டப்பேரவைதேர்தலின்போது முக்கியமான பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும்” என்றார்.
The post சொந்த கன்னத்தை குறித்து பேசமாட்டாரா? பாஜ வேட்பாளர் பிதுரியின் கருத்தை கேலி செய்த பிரியங்கா appeared first on Dinakaran.