சென்னை; யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. அவையில் இருந்த அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. முதலமைச்சரின் தனித்தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்தது. தனித்தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
The post யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது appeared first on Dinakaran.