×

இலங்கை கடற்படை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுவதால் குறிப்பிட்ட பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்: தமிழக மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை சார்பில் இன்று துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுவதால், தமிழக மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளில், மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. இலங்கையின் வடக்கு பிராந்திய கடற்படையினர், அந்நாட்டில் உள்ள பருத்தித்துறை கடலில் அமைந்துள்ள `P421’ கடற்படை தளத்தில், இன்று துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக இலங்கை கடலோர காவல்படையின் வடக்கு பிராந்திய அதிகாரிகள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை மூலம் அனைத்து மீனவ சங்கங்களுக்கும் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளனர்.

அதில், ‘இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுவதால், குறிப்பிட்ட பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்பரப்பு அருகே செல்வதை தவிர்க்க வேண்டும் என ராமேஸ்வரம் மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post இலங்கை கடற்படை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுவதால் குறிப்பிட்ட பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்: தமிழக மீனவர்களுக்கு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Sri Lankan Navy ,Rameswaram ,Fisheries Department ,Northern Region Navy ,Sri Lanka ,Pedro Sea ,
× RELATED தமிழகத்திற்கு கடத்தி வந்த ரூ.28 கோடி தங்கம் பறிமுதல்: 3 பேர் படகுடன் கைது