×

டங்ஸ்டன் விவகாரம் – தங்கம் தென்னரசு பதில்

சென்னை: அரிட்டாபட்டி டங்ஸ்டன் விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்தார். அப்போது பேசிய அவர்; அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆதரித்து வாக்களித்ததே எல்லா பிரச்சனைக்கும் காரணம். டங்ஸ்டன் சுரங்கம் அமைய மூல முதல் காரணமே அதிமுகதான். மதுரை அரிட்டாபட்டியில் ஒருபோதும் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது. டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஏலம் விட முயற்சித்தபோது அப்போதே எதிர்த்தது திமுக அரசு. எதிர்ப்பை மீறிதான் டங்ஸ்டன் ஏல நடைமுறையை ஒன்றிய அரசு மேற்கொண்டது. ஒன்றிய அரசு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஏலம் கொடுத்தபோதும் திமுக அரசு தொடர்ந்து எதிர்த்தத என்று கூறினார்.

The post டங்ஸ்டன் விவகாரம் – தங்கம் தென்னரசு பதில் appeared first on Dinakaran.

Tags : Gold Southern State ,Chennai ,Minister ,Aritapatti ,AIADMK Rajya Sabha ,AIADMK.… ,Dinakaran ,
× RELATED எதிர்க்கட்சிகள் விஷமத்தனமான பிரசாரம்...