×

ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு ஒதுக்கப்படும் நிதி முழுவதும் சென்றடைவதை உறுதி செய்ய முதல்வர் தலைமையில் குழு

சென்னை: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணை திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதி முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டச் சட்டத்தின்படி முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைவராக கொண்டு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர் மற்றும் மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய மாநில மன்றம் அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது. இந்த மன்றம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டத்திற்கு திட்டமிடுதல், ஒப்புதல் அளித்தல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் போன்ற செயற்பணிகளை மேற்கொள்ளும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டச் சட்டத்தின் கீழ் மாவட்ட கண்காணிப்பு குழுவினை அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு ஒதுக்கப்படும் நிதி முழுவதும் சென்றடைவதை உறுதி செய்ய முதல்வர் தலைமையில் குழு appeared first on Dinakaran.

Tags : Adi Dravidar ,Chennai ,Adi Dravidar and Tribal Welfare Department ,Dinakaran ,
× RELATED முனைவர் பட்ட மாணவர்கள்...