×

ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு உடனே திரும்பபெற வேண்டும்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்மொழியையும், தமிழ்நாட்டு மக்களையும் தொடர்ந்து இழிவுபடுத்துவதையே தனது நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் செயல்பட்டு வருவது வன்மையானக் கண்டனத்துக்குரியதாகும். ஆண்டாண்டு காலமாக பேரவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் நாட்டுப் பண் பாடுவதும் மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் ஆளுநர் ரவி தமிழ்நாட்டினுடைய ஆளுநராக பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து இந்த மரபுகளை மாற்ற முயற்சிக்கிறார். குறுக்கு வழியில் இந்த அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் தேட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு கருவியாக ஆளுநர் பயன்படுத்தப்பட்டு வருகிறார். என்ன தான் சண்டித்தனம் செய்தாலும், சாட்டையால் அடித்தாலும், சங்கு ஊதினாலும், தமிழ் மண்ணில் ஒருபோதும் தாமரை மலராது.

The post ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு உடனே திரும்பபெற வேண்டும்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Union Government ,R.N. Ravi ,Farmers-Workers Party ,Chennai ,Tamil Nadu Farmers-Workers Party ,Ponkumar ,Governor ,Tamil Nadu ,Thayi ,Dinakaran ,
× RELATED சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள...