×

உளுந்தூர்பேட்டை அருகே காப்பு காட்டில் மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடிய 3 பேர் அதிரடி கைது

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே காப்புக்காட்டில் மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடிய 3 பேரை போலீசார் கைது செய்து, நாட்டுத்துப்பாக்கி மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். இருவரை தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கள்ளக்குறிச்சி மாவட்ட குற்ற நுண்ணறிவு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்டு ராபின்சன், சப்-இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், தலைமை காவலர்கள் ராஜசேகர், மணிகண்டன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் இன்று அதிகாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கூட்டடி கள்ளக்குறிச்சி காப்புக்காடு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து விசாரித்த போது அவர்களிடம் ஒரு நாட்டுத் துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது.

அவர்கள் காப்புக் காடுகளில் மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடியது தெரியவந்தது இதனை அடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆரியநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சிவா (25), சேகர் மகன் ராஜ்குமார் (25), ராஜா மகன் ஐயப்பன் (18) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். ஒரு நாட்டுத் துப்பாக்கி உடன் தப்பி ஓடிய எறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோசப்ராஜ், ஆரியநத்தம் கிராமத்தை சேர்ந்த இளையபெருமாள் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post உளுந்தூர்பேட்டை அருகே காப்பு காட்டில் மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடிய 3 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Ulundurpettai ,Thirunavalur police station ,Kallakurichi ,
× RELATED உளுந்தூர்பேட்டையில் சினிமா பாணியில் மதுபாட்டில்களை கடத்தியவர் கைது