- ஐயப்பன்
- அய்யப்பன் ஆசி
- மணிகண்டன்
- மலைவேலன் வம்சம்
- வபுரன்
- வாபர் சாமி
- அரிகரபுத்திரன்
- பெருமால்...
- அய்யப்பன் அறிவோம்
ஐயப்பன், மணிகண்டன் அவதார நோக்கில் உண்மையான பக்தர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கினார். அந்த வகையில் சிறப்புக்குரியவர்கள் மலைவேலன் வம்சத்தினர், காணிகாரர் குடியினர், கம்பங்குடி குடும்பத்தார் மற்றும் வாபூரன் (வாபர் சாமி) மலை வேலன் வம்சத்தினர். அரிகர புத்திரனான ஐயப்பனின் தாயாக, பெருமாள் மோகினி அவதாரம் எடுத்தார். ஐயப்பன் மகிஷி வதத்துடன் தொடர்புடைய தேவர்களுக்கு ஏற்பட்ட சாபம் நீங்க பாற்கடலை கடைந்தபோது, மோகினியான பெருமாளுக்கு சனிதோஷம் ஏற்பட்டது. அதனை போக்க மலைவேலன் வேடமிட்டு ஐயப்பன் வருகிறார்.
மோகினியான பெருமாள் முன் அமர்ந்து உடுக்கு அடித்து மந்திரங்கள் (பாட்டு) கூறி தோஷத்தை நீக்கியதாக புராணம் உண்டு. அத்தகைய சிறப்புக்குரிய மலைவேலன் இனத்தை சேர்ந்தவர்களுக்கும் ஐயப்பன் வழிபாட்டில் முக்கிய இடம் உண்டு. அந்த மலைவேலன் வம்சத்தினர் இன்று ஆரன்முளாவில் வசித்து வருகின்றனர். அவர்கள் ஆண்டுதோறும் சபரிமலைக்கு வந்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்துள்ளனர். அப்போது மாலை அணிந்து வரும் பக்தர்களுக்கு உடுக்கடித்து பாட்டு பாடி விபூதி தரும் சடங்கை செய்து வருகின்றனர்.
மேலும் சனீஸ்வரன், ஐயப்பனிடம் கொடுத்த வாக்குறுதியின்படி சனிதோஷம் ஏற்பட்டால், மனிதன் எந்த மாதிரி எளிமையாக வாழ்வானோ, அதனைபோன்று ஐயப்பன் விரதமுறையில் வாழ்வதுடன், கருப்பு உடை அணிந்து இருப்பதால் சனியால் தொந்தரவு கிடையாது என்ற நம்பிக்கையும் உள்ளது. சிறப்புக்குரிய மலைவேலன் வம்சத்தினரிடம் ஆசி பெறுவதால் சனிதோஷம் நீங்குவதாக ஐதீகம். காணிகாரர் குடியினர் (பழங்குடி) 18 மலைகளை உள்ளடக்கிய சபரிமலையின் மலைவாழ் மக்கள் ஆவர்.
காந்தமலையிலுள்ள பொன்னம்பலமேட்டில் மகர நாளில் (தர்ம) சாஸ்தா வழிபாடு செய்து (மகர) ஜோதி ஏற்றுவதும் இவர்களே என்ற (உறுதியற்ற) ஒரு கருத்தும் உள்ளது. மணிகண்டன் புலிப்பாலை தேடி அவர்கள் வசிக்கும் காட்டுப்பகுதிக்குள் சென்றதும், தங்களது பகுதிக்குள் நுழைந்த பாலகனான ஐயப்பனை கண்டு வியக்கின்றனர். பசியோடு வந்த மணிகண்டனுக்கு மூங்கில் குச்சியில் வைத்து தேன், வாழைப்பழம், கரும்பு உள்ளிட்ட மலையில் கிடைக்கின்ற உணவுகளை வழங்கி உபசரிக்கின்றனர்.
தங்களது காட்டுப் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் புதியவர்களை இயல்பாக தாக்கக்கூடிய இந்த மக்கள், தன்னை உபசரிப்பதை கண்டு ஐயப்பன் வியக்கிறார். இதனையடுத்து தான் யார் என்று வெளிப்படுத்துகிறார். தாங்கள் வணங்கும் சாஸ்தாவின் அவதாரம் என்பதால் அவர்களும் வணங்கி நின்றனர். தங்களது வழக்கத்தை மாற்றி பசியோடு வந்த தனக்கு உணவு வழங்கி உபசரித்ததால் அந்த மலைவாழ் மக்களுக்கு தன்னை வழிபடுவதில் முக்கிய இடம் தந்து மணிகண்டன் ஆசி வழங்கினார். அந்த மரபின்படி இன்றும் சபரிமலைக்கு வந்து உணவு பொருட்களை வழங்கி, ஐயப்பனை வழிபட்டு செல்கின்றனர். சாமியே சரணம் ஐயப்பா
(நாளையும் தரிசிப்போம்)
சபரிமலையில் நாளை
அதிகாலை
3.00 நடை திறப்பு
3.05 நிர்மால்ய தரிசனம்
3.15-11.30 நெய்யபிஷேகம்
3.25 கணபதி ஹோமம்
காலை
7.30 உஷ பூஜை
நண்பகல்
12.30 உச்சிகால பூஜை
1.00 நடை அடைப்பு
மாலை
3.00 நடை திறப்பு
6.30 தீபாராதனை
இரவு
7.00 புஷ்பாபிஷேகம்
9.30 இரவு பூஜை
10.50 அரிவராசனம்
11.00 நடை அடைப்பு
The post ஐயப்பன் அறிவோம் 55: ஐயப்பன் ஆசி appeared first on Dinakaran.