×

ஐயப்பன் அறிவோம் 53: திருவாபரணம்

மன்னர் ராஜசேகர பாண்டியன் உள்ளிட்ட அனைவரும் ஐயப்பனை ஜோதியாக வழிபட்டனர். அப்போது ஐயப்பன் கூறியதை மன்னரிடம் எடுத்துரைக்கிறார் அகத்தியர். ‘‘மன்னராக இருந்தாலும் ஒரு மண்டல காலம் கடும் பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடித்து, அனைத்து ஆடம்பரம், வசதிகள், சுகபோக குடும்ப வாழ்க்கையை புறம்தள்ளி, ஆணவம், காமம், குரோதம் உள்ளிட்ட அனைத்தையும் துறந்தீர். பின்பு சரணாகதி நிலையில் மனிதனின் உடலில் உள்ள ஆறுநிலையை உணர்த்தக் கூடிய அந்த ஆறு ஆதார தலங்களையும் கடந்து ஐயப்பன் அவதாரங்கள், பரிவாரங்களை வணங்கி, ஐயப்பன் கூறிய உபதேசங்களை பின்பற்றி, கடைசியாக ஏழாவது சக்கரமான மகர ஜோதியை தரிசனம் செய்தீர்.

அதன்படி உங்கள் (முதல் பக்தர்) வழியிலேயே அனைத்து பக்தர்களும் பின்பற்றி வருவார்கள். ஐயப்பனுக்கு அரண்மனையில் இருந்து கொண்டு வரும் அங்கியை (உடை) மண்டல பூஜை நாளிலும், திருவாபரண பெட்டியில் உள்ள திருமுகம் (சாஸ்தா முகம்) பரபா மண்டலம் (திருவாச்சி), பெரியகத்தி, சிறிய கத்தி, 2 யானை சிலைகள், ஒரு புலி சிலை, வலம்புரி சங்கு, பூத்தட்டு, நவரத்தின மோதிரம், தங்கம், வில்வம், எருக்கம் பூ, மணி மாலைகள் மற்றும் வெள்ளி பெட்டியில் இருக்கும் தங்கத்தால் ஆன பூஜை பாத்திரங்கள் ஆபரணங்களை மகர நாளிலும் ஏற்றுக்கொள்ளுவார்.

ஐயப்பன் ஆசிபெற்ற மஞ்சமாதாவிற்கும் கொடி பெட்டியில் கொண்டு வரப்படும் ஆபரணம் (யானை ஊர்வலம் பொருட்கள், நெற்றி பட்டம், 2 கொடிகள், குடை) அணிவித்து வணங்க வேண்டும். இந்த திருவாபரண பெட்டிக்கு பாதுகாப்பாகவும், வழிகாட்டியாகவும் பெருமாளின் வாகனமான கருடன் (பருந்து) வரும், கருடன் அனுமதி (வந்த பிறகு) கிடைத்த பிறகே திருவாபரணம்பெட்டி புறப்பட வேண்டும். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இம்முறை தனிச்சிறப்புடன் விளங்கும். அதன்படி எல்லா வகையிலும் (ஐயப்பன் கோயில் வழிபாட்டு முறையில்) தங்களுக்கான முக்கியத்துவத்தை என்றென்றும் வழங்குவார்’’ என ஆசி வழங்கி அகத்தியர் முனிவர் வழி அனுப்பி வைத்தார்.

ஐயப்பன் கடவுளாக இருந்தாலும் கூட, தான் வளர்த்த மகன் என்பதால், கோயிலை விட்டு புறப்பட மனம் இல்லாமல் தந்தை பாசத்துடன் தயங்கி நிற்கிறார் (சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு இந்த அனுபவம் இன்றும் ஏற்படுகிறது). ஒருவழியாக மனதை தேற்றிக்கொண்டு, சன்னிதானத்தில் இருந்து 18 படி வழியாக கீழே இறங்க துவங்கினார். ஐயப்பனின் பரிவாரங்கள் துணையோடு, தான் சென்ற பம்பா, எரிமேலி பெருவழிபாதையின் வழியாக திரும்பிய மன்னர் ராஜசேகரபாண்டியன், செல்லும் வழியிலும், தன்னை பாதுகாப்பாக சபரிமலை கொண்டு வந்து திருப்பும் பரிவாரங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கற்பூரம் ஏற்றி, சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டவாறு பந்தள அரண்மனையை அடைந்தார். சுவாமியே சரணம் ஐயப்பா
நாளையும் தரிசிப்போம்
* சபரிமலையில் நாளை
அதிகாலை
3.00 நடை திறப்பு
3.05 நிர்மால்ய தரிசனம்
3.15-11.30 நெய்யபிஷேகம்
3.25 கணபதி ஹோமம்
காலை
7.30 உஷ பூஜை
நண்பகல்
12.30 உச்சிகால பூஜை
1.00 நடை அடைப்பு
மாலை
3.00 நடை திறப்பு
6.30 தீபாராதனை
இரவு
7.00 புஷ்பாபிஷேகம்
9.30 இரவு பூஜை
10.50 அரிவராசனம்
11.00 நடை அடைப்பு

The post ஐயப்பன் அறிவோம் 53: திருவாபரணம் appeared first on Dinakaran.

Tags : Ayyappan ,King ,Rajasekara Pandian ,Agattiah ,
× RELATED ஐயப்பன் அறிவோம் 49: முக்குழியில் தங்கினார்