- மராஜோதி
- பரமத்மா
- ஐயப்பன்
- அகஸ்டின்
- அரிகரன்
- பெருமாள்
- சிவன்
- அய்யப்பன் நிவர்
- பரசுராமர்
- பூஜை
- ஐயப்பன் தனவோம் மகாராஜோதி
ஐயப்பன் கூறியபடி ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலக்கும் தத்துவத்தை உணர்த்தும்விதமாக, அரிகரன்(பெருமாள், சிவன்) அம்சம் கொண்ட மன்னர் சுமந்து வந்த இருமுடி தேங்காயில் இருந்து நெய்யை எடுத்து ஐயப்பனுக்கு அபிஷேகம் உள்ளிட்ட பூஜையை அகஸ்தியர் முனிவர் செய்தார். சிலையை பரசுராமர் வடிவமைத்திருந்தாலும், பூஜை, மந்திரம், விரதம், வழிபாட்டு நெறிமுறைகளை அகஸ்திய முனிவர் வகுத்ததால் ஐயப்பனுக்கு முதன் முதல் பூஜையை அகஸ்தியரே செய்தார்.
ஐயப்பனின் சொல்படி, மனித உடல் அமைப்பின்படி உயர்வான தவயோக நிலையான குண்டலினி சக்தி தத்துவத்தை உணர்த்தும்விதமாக, முதல் சக்கரமான மூலதாரம் சொரிமுத்து அய்யனார் கோயிலில் இருந்து யாத்திரையை துவங்கி, ஆக்கினை சக்கரமான சபரிமலை வரை தடையின்றி வந்து, மகிழ்ச்சியுடன் தரிசனம் செய்தது, தான் செய்த பாக்கியமாக மன்னர் ராஜசேகரபாண்டியன் கருதினார். அவர், ஐயப்பனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தரையில் விழுந்து மனதார வணங்கினார்.
பிறகு அம்மன் மஞ்சமாதா, பூதகணங்களான கொச்சி கடுத்தன், ஐயப்பனிடம் தீட்சை பெற்ற நாகர் உள்ளிட்ட பரிவாரங்களை வணங்கி வந்தார். பிறகு மண்டல நாள் என்பதால் ஐயப்பன் தனக்கு அளித்த உரிமைப்படி அரண்மனையில் இருந்து எடுத்து வரப்பட்ட விலை உயர்ந்த தங்க அங்கி. ஆபரணங்கள், ஐயப்பன் பயன்படுத்திய பொருட்களை அகஸ்தியரிடம் கொடுத்து ஐயப்பன் திருமேனியில் அணிவித்து, கண்டு அகம் மகிழ்ந்தார் மன்னர்.
தந்தைக்கு தான் கொடுத்த வாக்குறுதியின்படி அன்றைய நாள் ராஜகுமாரனாக ஐயப்பன் காட்சியளித்தார். சாஸ்தா அவதாரத்தின்படி தேவர்கள், முனிவர்கள், பூதகணங்களுக்கு வாக்கு அளித்தபடியும், ஐயப்பன் மணிகண்டன் அவதாரத்தில் முறையான பிரம்மச்சரிய விரத முறையை கடைபிடித்து ஆறு சக்கரங்களை யார் (பக்தர்) கடந்து வருகிறார்களோ, அவர்களுக்கு ஏழாவது சக்கரமான பிரம்மாந்திரம்(தலை) காந்தமலை, பொன்னம்பல மேட்டில் ஜோதியாக காட்சியளிப்பேன் என ஐயப்பன் கூறியதை அகஸ்தியர், மன்னர் நினைவு கூர்ந்தனர்.
அதன்படி மகர நட்சத்திர திதி நாளான அன்று மாலையில் முதன்முதலில் தான் அவதரித்த உத்திர நட்சத்திரமாக தோன்றி, அனைவருக்கும் காட்சியளித்து மறைந்தார் ஐயப்பன். அதன்பிறகு பார்வதி, சிவன், பெருமாள், பிரம்மன் ஆகியோர் ஆசிர்வாதத்தோடு தந்தை(வளர்ப்பு) ராஜசேகரபாண்டியன், குருநாதர், அகஸ்தியமுனிவர், பரசுராமர், இந்திரன் உள்ளிட்ட முப்பது முக்கோடி தேவர்கள், முனிவர்கள், பூதகணங்கள், வனதேவதைகள், பக்தர்கள், உலக மக்கள், உயிரினங்கள் அனைவருக்கும், உலக நன்மைக்காக 3 முறை மகரஜோதியாக உருவமற்று(தீ) காட்சியளித்தார் தர்மசாஸ்தாவான ஐயப்பன்.- சுவாமியே சரணம் ஐயப்பா
The post ஐயப்பன் அறிவோம் மகரஜோதி appeared first on Dinakaran.