ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மறியல் 40 பேர் கைது கோரிக்கைகளை வலியுறுத்தி

வேலூர், ஜன.8: கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 40 பேர் கைது செய்யப்பட்டனர். ஊரக வளர்ச்சித்துறையில் ஊராட்சி செயலாளர் உட்பட காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டகணினி உதவியாளர்கள் மற்றும் எஸ்எஸ்எம் திட்ட ஒருங்கிணைப்பாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும் என்பது உள்பட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் ஜனவரி 7ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று காலை நடந்த மறியல் போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் மீனா முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் செல்வகுமார் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் ஜோஷி வாழ்த்தி பேசினார். தொடர்ந்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

The post ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மறியல் 40 பேர் கைது கோரிக்கைகளை வலியுறுத்தி appeared first on Dinakaran.

Related Stories: