×

சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி: அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார்

சென்னை: சென்னை தீவுத்திடலில் நேற்று 49வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ள சி.எம்.டி.ஏ. கண்காட்சி அரங்கை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டார். சிஎம்டிஏ கண்காட்சி அரங்கு சென்னை, குத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையத்தின் முகப்புடன் வடிவமைத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குத்தம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையம் உலகத்தரம் வாய்ந்த சிறந்த கட்டமைப்பு வசதிகளுடன் இந்தியாவிலே இரண்டாவது பெரிய பேருந்து முனையமாக கட்டப்பட்டு வருகிறது. சென்னை தீவுத்திடலில் உள்ள சென்னை பெருநகர் வளர்ச்சி குழும அரங்கத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ரூ.2,600 கோடி மதிப்பீட்டில் 193 புதிய திட்டங்கள் மற்றும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் திட்டங்கள் அடங்கிய கண்காட்சி அரங்கமாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், சமுதாய நலக்கூடங்கள், முதல்வர் படைப்பகம், நூலகங்கள், ஏரிக்கரை மற்றும் கடற்கரையை மேம்படுத்துதல் என பல்வேறு திட்டங்களாக விளக்கக் கூடிய வகையில் புகைப்படப் கண்காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்கும் வகையில் 84 புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி அரங்கில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வால்டாக்ஸ் சாலை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனை சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய குடியிருப்புகள் மாதிரி வடிவம், கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம் மாதிரி வடிவம், கொளத்தூர் மக்கள் சேவை மையம் மாதிரி வடிவம் மற்றும் கோயம்பேட்டில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தின் மூன்றாம் கட்டிடம் மாதிரி வடிவம் உள்ளிட்ட பல்வேறு மாதிரிகள் பொது மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

 

The post சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி: அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார் appeared first on Dinakaran.

Tags : Tourism Exhibition ,Chennai Island ,Minister ,Sekarbabu ,Chennai ,CMTA ,49th India Tourism and Industry Exhibition ,Kutthambakkam, Chennai… ,
× RELATED பொங்கல் பரிசுத் தொகுப்பினை குடும்ப...